சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் செல்லாத நிலையில், ஸ்டீபன் பிளெமிங் விலகிய பிறகு இந்தியப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என தோனி விரும்பியதாகக் கூறப்படுகிறது. 2011 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஜாகீர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்
Source: malaimurasu.com