வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக வெளியான தகவல் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆணையர்கள் எந்த முடிவிலும் அதிகாரப்பூர்வமாக மாறுபட்ட கருத்தை பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவம் 6 மாற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையம் விளக்கம்
Source: malaimurasu.com