மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டம், மியான்மர் எல்லையை ஒட்டிய பிலோங் கிராமத்தில் ஆயுதமேந்தியோர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். குக்கி தேசிய ராணுவம்-பர்மா மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புகளுக்கு நீதி கோரி தங்குல் நாகா லாங் அமைப்பு 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மணிப்பூர் எல்லை கிராமத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பொதுமக்கள் பலி
Source: malaimurasu.com