SIR தொடர்பான முடிவுகளில் தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக பாஜக கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளன. இரண்டு தேர்தல் ஆணையர்கள் 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க ஆணையம் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு: பாஜக கூட்டணிக் கட்சிகள் விளக்கம் கேட்பு
Source: OneIndia Tamil