2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செலவின அறிக்கையை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. பரப்புரைக்காக மொத்தம் 19 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், அதில் ஊடக விளம்பரங்களுக்கு 6.35 கோடி, விஜயின் விமானப் பயணத்திற்கு 3.55 கோடி, பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு 2.06 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. தேர்தல் காலத்தில் 7.02 கோடி ரூபாய் வரவு கிடைத்ததாகவும், வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை எந்த செலவையும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தல்: தவெக 19.40 கோடி ரூபாய் செலவு கணக்கு தாக்கல்
Source: News18 Tamil