நிஷ்ஷினில் நேபாளத்துடனான காலிறுதிப் போட்டி மழையால் ரத்தானதால், இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா, சஹான் அரச்சிகே தலைமையிலான இலங்கையை வியாழக்கிழமை அரையிறுதியில் எதிர்கொள்ளும். இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான்-வங்கதேசம் மோதும். காய்ச்சல் காரணமாக வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ போட்டியிலிருந்து விலகினார்.
ஆசிய விளையாட்டு: இலங்கை அணியுடன் இந்தியா அரையிறுதியில் மோதல்
Source: news18.com