கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூட்யூபர் மதுமிதா வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவில் அதிக நகை, பணம் காண்பித்ததைப் பார்த்தே கொள்ளையடிக்க திட்டமிட்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூட்யூபர் மதுமிதா வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளை: 3 பேர் கைது
Source: ABP Nadu