புற்றுநோய் மருந்து ஒன்றின் விற்பனை விலை ₹2,700 ஆனால் அதிகபட்ச சில்லறை விலை ₹27,000 என இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தப் பெரும் விலை வேறுபாட்டுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அத்தியாவசிய மருந்துகளுக்கு உச்ச விலையை நிர்ணயித்தாலும், அனைத்து மருந்துகளும் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை என்பது முக்கிய விவாதமாக உள்ளது.
புற்றுநோய் மருந்து விலை: உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்பு
Source: malaimurasu.com