கேரளாவில் 12 மாவட்டங்களில் உள்ள 38 வார்டுகளில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 18 இடங்களையும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 16 இடங்களையும் கைப்பற்றின. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வார்டையும், சுயேச்சைகள் மூன்றையும் வென்றன. ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், இடதுசாரிகள் ஏழு இடங்களைக் கைப்பற்றியது பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் இடதுசாரி முன்னேற்றம்
Source: news18.com