துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி கத்தியால் தாக்கி விமானத்தை கவிழ்க்க முயன்றார். படுகாயமடைந்த இந்திய கேப்டன் எதிர்த்துப் போராடியதுடன், இஸ்ரேலிய பயணிகள் உதவியுடன் தாக்குதல் தடுக்கப்பட்டு, சவுதி அரேபியாவின் தபூக்கில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 180-க்கும் மேற்பட்டோரின் உயிர் காக்கப்பட்ட நிலையில், காயமடைந்த கேப்டன் தபூக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானத்தை கவிழ்க்க முயன்ற ஓமன் இணை விமானி: இந்திய கேப்டன் தடுத்து 180 பேர் உயிர் காப்பு
Source: ABP Nadu