ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செப்டம்பர் 30 அன்று வில்வித்தையில் மூன்று தங்கமும், துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கமும் என இந்தியா ஒரே நாளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது; இதில் 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் அடங்கும். பதக்கப் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. மகளிர் ஹாக்கியில் தென் கொரியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கம்
Source: Vikatan