தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அமராவதி சிலை பகுதியில் தொடங்கிய ரோடு ஷோ, பொள்ளாச்சி சாலை, பெரிய கடைவீதி வழியாக நடைபெற்றது. மளிகை கடைக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். மாலை பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து விஜய் புதன்கிழமை பிரச்சாரம் செய்த நிலையில், ஸ்டாலின் பதிலளிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
தாராபுரம் இடைத்தேர்தல்: ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்
Source: malaimurasu.com