தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தான் வாக்கு கேட்டு வரவில்லை, நியாயம் கேட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் கட்டிய வரிப்பணத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றும், துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நான்கே மாதங்களில் நாறிப்போனதாகவும், மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
நான் வாக்கு கேட்டு வரவில்லை, நியாயம் கேட்டு வந்துள்ளேன்: ஸ்டாலின்
Source: Polimer News