கிழக்கு லடாக் எல்லையில் உள்ள 28 புவியியல் அம்சங்களுக்கு இந்தியா அதிகாரபூர்வ பெயர்களைச் சூட்டி, நில அளவைத் துறையின் வரைபடத்தில் சேர்த்துள்ளது. உள்துறை அமைச்சக வழிகாட்டலில் லடாக் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன. சிகரங்கள், பனியாறுகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் இப்பட்டியலில் உள்ளன. அருணாச்சலத்தில் சீனா தன்னிச்சையாகப் பெயர் சூட்டி வரும் நிலையில், இந்நடவடிக்கை தூதரக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா அதிகாரபூர்வ பெயர்
Source: BBC Tamil