ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. 45 நாடுகள் மற்றும் அகதிகள் அணி என 17,000 பேர் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் சீனா 341 பதக்கங்களுடன் முதலிடம், ஜப்பான் இரண்டு, தென் கொரியா மூன்று. இந்தியா 21 தங்கம் உள்பட 85 பதக்கங்களுடன் நான்காம் இடம் பிடித்தது. அடுத்த போட்டி 2030ல் கத்தாரில் நடைபெறும்.
20வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு: இந்தியா 4வது இடம்
Source: Dinakaran