உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி புதிய உளவுத்தகவல்களை மேற்கோள்காட்டி எச்சரித்துள்ளார். தற்காப்புத் திறன் கொண்ட நாடுகள் ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவின் அரசியல் ஆதரவு அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே கருங்கடலில் தானியக் கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது பாரிய தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகிறது: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
Source: news18.com