2026-27 ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதற்கு அவர் பயிற்சி முகாமில் பங்கேற்காததே காரணம் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு மாதமாக வியர்வை சிந்தி பயிற்சி பெற்ற இளம் வீரரை நீக்கி, பயிற்சிக்கு வராதவருக்கு இடம் கொடுப்பது நியாயமல்ல என சங்க வட்டாரங்கள் கூறுகின்றன. உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் பரிசீலிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் பங்கேற்காத சூர்யகுமார் ரஞ்சி அணியில் இருந்து நீக்கம்
Source: myKhel tamil