ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியடைந்து கணக்கில் பணம் கழிக்கப்பட்டால், ரிசர்வ் வங்கி விதிகளின்படி அதிகபட்சம் ஐந்து காலண்டர் நாட்களுக்குள் அந்தத் தொகை தானாகவே திரும்பச் செலுத்தப்பட வேண்டும். காலக்கெடு மீறினால் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் வங்கி ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும். உடனடியாக அட்டையை வழங்கிய வங்கியில் புகார் அளித்து புகார் எண்ணைப் பெற்றுக்கொள்வது அவசியம். தீர்வு கிடைக்காவிட்டால் ஆர்பிஐ குறைதீர்ப்பு இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் 5 நாட்களில் பணம் திரும்பும்
Source: Asianet News Tamil