இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கு ஏகபோக உரிமை இல்லை என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் சேவை தடுக்கப்படுவதாக எலான் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோ சாட்காம், யூட்டல்சாட் ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகே சேவை தொடங்க அனுமதி என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவில் எந்தத் துறைக்கும் ஏகபோக உரிமை இல்லை: மத்திய அமைச்சர்
Source: Tamil Murasu