சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையம் காலி செய்யப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது; 242 விமானங்கள் ரத்து, 230 தாமதம். பலர் காயமடைந்ததாகத் தகவல்; உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. கடந்த அக்டோபரில் இதே விமான நிலையம் மீது நடந்த தாக்குதலில் 3 சவுதி குடிமக்கள் உயிரிழந்தனர்.
ரியாத் விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: 242 விமானங்கள் ரத்து
Source: NewsBytes Tamil