பூர்ணா நடிப்பில் வெளியாகியுள்ள 'கண்ணமூச்சி' ஹாரர் த்ரில்லர் வெப் தொடர் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. காது கேளாத மகளுடன் சென்னை அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயரும் பிரியா, கண்ணாமூச்சி விளையாட்டின் நடுவே மகள் மாயமாவதை எதிர்கொள்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மர்மத்துடன் இது தொடர்புடையதாக கதை நகர்கிறது. ஐந்து எபிசோடுகள் கொண்ட இத்தொடர் பல மொழிகளில் கிடைக்கிறது.
ஜீ5-இல் திகில் கிளப்பும் 'கண்ணமூச்சி' வெப் தொடர்
Source: Asianet News Tamil