பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் OBC, EBC, DNT மாணவர்களுக்கான விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 9-10 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரையும், 11-12 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்டோபர் 31, 2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
OBC, EBC, DNT மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கால நீட்டிப்பு
Source: ABP Nadu