நீண்ட கால மூலதன ஆதாய வரி (எல்.டி.சி.ஜி) மற்றும் பத்திரப் பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி) குறித்து முதலீட்டாளர்களின் கருத்துகளைக் கேட்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு முன்பு நடைபெறும் கலந்துரையாடல்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், வரியை நீக்குவது அல்லது விகிதங்களை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எல்.டி.சி.ஜி வரி குறித்து முதலீட்டாளர் கருத்துகளை கேட்கிறது மத்திய அரசு
Source: The Economic Times Tamil