தமிழ்நாடு மின்சார வாரியம் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் வரை அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஆந்திரா யூனிட் ஒன்றுக்கு 16-20 ரூபாய் வரை மட்டுமே வாங்குவதாகவும், இது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மெகா ஊழல் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரம் கொள்முதலில் மெகா ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Source: Dinakaran