சென்னை ஓபன் தொடரின் இரண்டாவது சுற்றில் போலந்தின் வெரோனிகா ஃபால்கோவ்ஸ்காவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, 17 வயதான மாயா ராஜேஷ்வரன் ரேவதி காலிறுதிக்கு முன்னேறினார். 2012-ல் சானியா மிர்சாவுக்குப் பிறகு WTA டூர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். உலக தரவரிசையில் 669-ஆவது இடத்தில் உள்ள மாயா, இந்த சீசனில் W35 தொடரில் பட்டம் வென்று முன்னேறி வருகிறார்.
சானியாவுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை மாயா
Source: Maalaimalar