1984-இல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டாம் என சோனியா காந்தி கெஞ்சியதாக அவரது நினைவுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த அந்த உரையாடலில், "உங்களையும் கொன்றுவிடுவார்கள்" என்று அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டுக்கான கடமையை நிறைவேற்ற வேண்டும் என ராஜீவ் மறுத்ததாகவும், அன்று மாலையே அவர் பிரதமராகப் பொறுப்பேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ் பிரதமராக வேண்டாம் என சோனியா கெஞ்சினார்: நினைவுக் குறிப்பில் தகவல்
Source: news18.com