இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ் 10 கிலோ சிலிண்டர் அறிமுகம்

இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ் 10 கிலோ சிலிண்டர் அறிமுகம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' என்ற புதிய 10 கிலோ எடை குறைவான கலவை சமையல் சிலிண்டரை புனேயில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஓசிஎல் தலைவர் ஏ.எஸ்.சாஹ்னே தொடங்கி வைத்த இந்த சிலிண்டர், பைபர் கலவையால் வடிவமைக்கப்பட்டு கையாள எளிதானது. முதற்கட்டமாக புனே, கோயம்புத்தூர், குருகிராம், இந்தூர் ஆகிய 4 நகரங்களில் விற்பனை தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்டு மத்தியில் மேலும் 25 நகரங்களுக்கும், அக்டோபர் இறுதிக்குள் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் 5 கிலோ இண்டேன் சோட்டு சிலிண்டருக்கு 4 மணி நேரத்தில் விநியோக சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Read the live feed on ZapIndies