தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தல் வாக்குறுதியான வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்றாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், இளைஞர்களின் பொருளாதார ஆதரவுக்காக இத்திட்டத்தை முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டம்: முதல் பட்ஜெட்டில் அறிவிப்பு எதிர்பார்ப்பு
Source: sathiyam.tv
Read the live feed on ZapIndies