சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காணாமல்போன 14 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் 51 பேர் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.
சிங்கப்பெண் அதிரடிப்படை ஒரே வாரத்தில் 346 புகார்களுக்குத் தீர்வு
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies