முட்டை விலை உயர்வுக்கு வெப்பநிலையும் மக்காச்சோளப் பற்றாக்குறையும் காரணம்

முட்டை விலை உயர்வுக்கு வெப்பநிலையும் மக்காச்சோளப் பற்றாக்குறையும் காரணம்

அதிக வெப்பநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். ஒரு முட்டையின் விலை 38 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மக்காச்சோள இறக்குமதி மற்றும் அரசுடன் கலந்துரையாடலுக்கான தமது கோரிக்கைகள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.

Source: IBC Tamil

Read the live feed on ZapIndies