வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால் இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 1ஆம் தேதி வரை மழை தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை
Source: OneIndia Tamil
Read the live feed on ZapIndies