இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் வெற்றி

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் வெற்றி

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்ட 'விக்ரம்-1' ராக்கெட், கடந்த 18-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு, 450 கி.மீ. உயர புவித்தாழ் வட்டப்பாதையை அடைந்தது. விண்வெளி கழிவுகளை அகற்றும் திறன் கொண்ட செயற்கைக்கோள் உட்பட 2 செயற்கைக்கோள்களும் பிரதமரின் வாழ்த்து அட்டைகளும் ஏற்றிச் செல்லப்பட்டன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவிய மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 100% இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, 1000 இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட்டைக் கட்டியவர்களின் சராசரி வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Read the live feed on ZapIndies