‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கும் வகையில், தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, வந்தே மாதரத்தை வேண்டுமென்றே இடையூறு செய்தால் அல்லது அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழி வகுக்கிறது. பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலை கட்டாயமாக இசைக்க வேண்டும் என புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.
‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies