சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ‘தலைமுடி வழியாக புதிய நோய் பரவுகிறது, மொட்டையடித்தால் அரசு ரூ.15,000 வழங்கும்’ என தாசில்தார் அலுவலகம் சார்பில் பேசியதாகக் கூறி மர்ம நபர் மூன்று பெண்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 டோக்கன் மட்டுமே உள்ளதாக கூறி அவசரப்படுத்தியதால் சுமார் 20 பேர் மொட்டையடிக்க தயாரான நிலையில் மூன்று பெண்கள் மொட்டையடித்தனர். பின்னர் தொலைபேசி அணைக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். காவல்துறை அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தது. இது போதையில் விளையாட்டாகச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மொட்டையடித்தால் பணம்: சேலத்தில் மூன்று பெண்கள் ஏமாற்றம்
Source: BBC Tamil
Read the live feed on ZapIndies