எஃப்.ஐ.எச் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணிகள் பாரம்பரிய நீல நிற ஜெர்சிக்குப் பதிலாக காவி நிற ஜெர்சியை அணியும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 15-30 வரை நடைபெறும் தொடரில் இந்தியா 'டி' பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ், பாகிஸ்தானுடன் இடம்பெற்றுள்ளது. நீல ஆடுகளத்தில் நீல ஜெர்சி ஒன்றிணைந்து தெரிவதால் வீரர்கள், பயிற்சியாளர்கள் பரிந்துரைத்ததை அடுத்து தேசியக் கொடியின் அடையாளமான காவி தேர்வு செய்யப்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நீலத்திலிருந்து காவிக்கு மாற்றம்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies