சர்வதேச கபடி வீரரின் மனைவி முஸ்கான் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

சர்வதேச கபடி வீரரின் மனைவி முஸ்கான் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

ஹரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் மனைவி முஸ்கான் (23), தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். டிசம்பர் 2023-ல் திருமணமான இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இது சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பாகக் கருதப்பட்டு, போலீசார் தடயவியல் ஆய்வுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே காரணம் உறுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies