சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ திரையரங்கில் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படத்தின் காலை 11.30 மணி 3D காட்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு, காட்சி இரவு 11.30 மணிக்கு மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்குமாறு கூறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ‘ஏ’ சான்றிதழ் காரணமாக மாணவர்களை அனுமதிக்க முடியாத நிலையில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பணத்தைத் திருப்பித் தரக்கோரி தியேட்டர் வளாகத்தில் திரண்டனர். ரீஃபண்ட் இரண்டு நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று மட்டும் கூறப்பட்டதாகவும், நிர்வாகத்திலிருந்து யாரும் நேரில் விளக்கவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஸ்பைடர்மேன் டிக்கெட்டுக்குப் பதிலாக ஜனநாயகன்: கேசினோ தியேட்டரில் ரசிகர்கள் போராட்டம்
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies