AI பயிற்சிக்காக லட்சக்கணக்கான புத்தகங்களை அழித்ததாக குற்றச்சாட்டு

AI பயிற்சிக்காக லட்சக்கணக்கான புத்தகங்களை அழித்ததாக குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், தங்கள் சாட்பாட் மாடல்களுக்கு பயிற்சி அளிக்க லட்சக்கணக்கான புத்தகங்களை வாங்கி, ஒவ்வொரு பக்கமாக ஸ்கேன் செய்து, பின்னர் அவற்றை அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கு எதிரான பதிப்புரிமை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, வாஷிங்டன் போஸ்ட் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. “புராஜெக்ட் பனாமா” எனப்படும் இத்திட்டத்தின் கீழ், உலகின் அனைத்து புத்தகங்களையும் ஸ்கேன் செய்து அழிக்கும் முயற்சியில் ஆந்த்ரோபிக் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. மெட்டா, ஓபன்ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றன.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies