தமிழ்நாடு அரசு விவசாய நில மாற்றம், பூங்கா ஒதுக்கீட்டுக்கு புதிய விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு விவசாய நில மாற்றம், பூங்கா ஒதுக்கீட்டுக்கு புதிய விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு, திட்டமிடப்படாத பகுதிகளில் விவசாய நிலங்களை விவசாயம் சாராத பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. நன்செய் நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்னனுமதியும், புன்செய் நிலங்களுக்கு வேளாண்மைத் துறையின் NOC-யும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், மனைப்பிரிவுகளில் பொது ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்ட பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களை வணிக அல்லது தனியார் பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இணங்க, 1971-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களை மாற்றுவது செல்லாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies