திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி: திருப்பூர் தமிழன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி: திருப்பூர் தமிழன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 10-வது டி.என்.பி.எல் போட்டி இன்று திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. திருப்பூர் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புவனேஷ்வரன், நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட் எடுத்தனர். பதிலுக்கு திண்டுக்கல் 9 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட் இழப்பில் 111 ரன்கள் எடுத்தது. அனுராக் ராஜேஷ் குமார் 34, விமல் குமார் 30 ரன்கள் சேர்த்தனர்.

Source: Maalaimalar

Read the live feed on ZapIndies