தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல்

தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல்

தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. 2026-27 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். அரை நூற்றாண்டு திராவிட ஆட்சிக்குப் பின் அதிகாரத்துக்கு வந்த தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட் மீது மாநில அளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், 'சிங்கப் பெண்' படை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இலவச எரிவாயு சிலிண்டர், விவசாயக் கடன் தள்ளுபடி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.

Source: NewsBytes Tamil

Read the live feed on ZapIndies