லீட்ஸ்: தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக், லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து தொடர் வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் 2022-ல் ஆடம் ரோசிங்டன் இதே மைதானத்தில் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் 100 பந்துகளில் 2 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்து, தொடரின் மிக உயர்ந்த ஸ்கோரை பதிவு செய்தது.
தி ஹண்ட்ரட்: 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த ஹாரி ப்ரூக்
Source: myKhel tamil
Read the live feed on ZapIndies