2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் திமுக ஆட்சியில் இருந்த பல நலத்திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 'நான் முதல்வன்' திட்டம் 'வெற்றி திறன் பயிற்சி திட்டம்' எனவும், 'கலைஞர் கனவு இல்லம்' 'வெற்றி வீடு திட்டம்' எனவும் மாற்றப்பட்டுள்ளன. இதை எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. புதிய திட்டங்களை அறிவிக்காமல் பெயர் மாற்றத்தில் கவனம் செலுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. அரசு தரப்போ, பெயர் மாற்றத்துடன் சேவைகளிலும் மேம்பாடுகள் இடம்பெறும் என விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்: 10 திட்டங்களுக்கு பெயர் மாற்றம் சர்ச்சை
Source: Kumudam
Read the live feed on ZapIndies