இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு

இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, கேகாலை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 51 தற்காலிக முகாம்களில் 3538 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் அலைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source: BBC Tamil

Read the live feed on ZapIndies