ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரூ.299 உள்ளிட்ட சில குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. ரூ.299 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கியது. இதற்கு பதிலாக ரூ.349 பிளான் அறிமுகமாகியுள்ளது. இது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. ரூ.579 மற்றும் ரூ.619 பிளான்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் பல சர்க்கிள்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் பிளான் நீக்கம்
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies