கேரளாவின் கண்ணூர் மாவட்டம் மீள்துள்ளி பகுதியில் காரியங்கோட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 61 வயது முதியவர் பென்னியை காப்பாற்ற, 36 வயதான நீச்சல் பயிற்சி வீரர் ராஜேஷ் தனது லைஃப் ஜாக்கெட்டை கழற்றி கொடுத்தார். முதியவர் உயிர் தப்பினாலும், ராஜேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது. 2018 கேரள வெள்ளம் மற்றும் 2024 வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய ராஜேஷுக்கு கேரள மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரள வெள்ளத்தில் முதியவரை காப்பாற்றி நீச்சல் வீரர் உயிர் தியாகம்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies