தனுஷ் அடுத்ததாக சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சாகசப் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. தனுஷ் சமீபத்தில் 'குபேரா', 'ஓம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்த நிலையில், தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தனுஷுக்கு பெரிய வெற்றி இல்லாத நிலையில், இந்த படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
தனுஷ் புதிய படத்தில் கரீனா கபூர் நாயகி
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies