பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் வெற்றி பெற்ற நிலையில், விமான எரிபொருளில் (ATF) எத்தனால் கலக்கப்படவுள்ளதாக பரவிய தகவலை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு மறுத்துள்ளார். இது தவறான தகவல் என்றும், அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். விமான எரிபொருளில் எத்தனால் நேரடியாக கலப்பது தொழில்நுட்ப ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாற்று எரிபொருளாக Sustainable Aviation Fuel (SAF) குறித்த ஆராய்ச்சிகள் உலகளவில் நடைபெற்று வருகின்றன.
விமான எரிபொருளில் எத்தனால் கலப்பு திட்டம் இல்லை: அமைச்சர்
Source: malaimurasu.com
Read the live feed on ZapIndies