கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு ரூ.550 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை ரூ.74.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த மே மாதம் நார்வே பயணத்துக்கு ரூ.17.46 கோடி செலவானது. இந்தப் பயணங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும், இக்காலத்தில் 316 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
மோடி பயணச் செலவு 5 ஆண்டுகளில் ரூ.550 கோடி
Source: Tamil Murasu
Read the live feed on ZapIndies