சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை மற்றும் விழா நடைபெறும் ஆகஸ்ட் 7, 11, 13, 15 ஆகிய தேதிகளில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று வழிகளாக வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிட வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் சுதந்திர தின ஒத்திகை: போக்குவரத்து மாற்றம்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies